அன்னதானம்

அன்னதானம்

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே பசித்தோர் முகம் பார் பரம்பொருள் அருள்கிட்டும்" என்ற வாக்கிற்கேற்ப தானத்தில் சிறந்த அன்னதானத்திற்கென மாண்புமிகு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நன்கொடையாளர்கள் பங்கேற்புடன் கூடிய அன்னதானத் திட்டம் இத்திருக்கோயிலில் 23.03.2002 - ம் தேதி முதல் துவங்கப்பட்டு சீரும் சிறப்புடன் அனைவராலும் பாராட்டப்படும் வண்ணம் நடைபெற்று வருகிறது.

இதற்கென இத்திருக்கோயிலில் அன்னதான திட்ட உண்டியல் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இந்த அன்னதானத் திட்டத்திற்கு பெறப்படும் நன்கொடைகள் / உபயங்கள் அனைத்தும் இத்திட்டத்திகென பேணப்பட்டு வரும் தனிக்கணக்கில் சேர்க்கப்பட்டு, இத்திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அன்னதான திட்டத்தில் பங்கேற்கும் வகையில் நன் கொடை வழங்க விரும்பும் ஆன்மீக பெருமக்கள் / பக்தர்கள் / நன் கொடையாளர்கள் ஆகிய அனைவரும் இத்திருக்கோயில் உள்துறை அலுவலகத்திலோ அல்லது தலைமை அலுவலகத்திலோ ரொக்கமாக செலுத்து ரசீது பெற்றுக்கொள்ளலாம். திருக்கோயில் உள்ள அன்னதான உண்டியலிலும் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை நேரடியாக செலுத்தலாம் / மணியார்டர் மூலமாக நன் கொடை செலுத்த் விரும்புபவர்கள் இணை ஆணையர் / நிர்வாக அதிகாரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் - 621 112, என்ற பெயருக்கு அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தங்களால் முடிந்த தொகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் நன் கொடையாக அளிக்கலாம். இத்திட்டத்திற்கு செலுத்தப்படும் நன் கொடைத் தொகைகளுக்கு வருமான வரி விலக்கு 80 (G)(5)(vi) பெறும் வசதியும் உள்ளது.

கலியுக கண்கண்ட தெய்வம் வேண்டியவருக்கு வேண்டிய வரம் அளிக்கும் ஆயிரம் கண் உடையவர், சமயபுரவாசி ஆதி பீட மகாமாரியின் அடியார்களுக்கு அன்னம் படைப்பது அவளுக்கு அமுது படைப்பதற்கு ஒப்பான காரியம் ஆகும்.

எனவே ஆன்மீக அன்பர்கள், பக்தர்கள் இத்திட்டம் சீரும் சிறப்பும் பெற்று தொடர்ந்து செயல்பட தாராளமாக நிதியுதவி அளித்து எல்லாம் வல்ல சமயபுரத்தாள் அருள் பெற்று எல்லா நலமும், வளமும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

வங்கி வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி

இணை ஆணையர் / நிர்வாக அதிகாரி
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
சமயபுரம் - 621112,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா
தொலைபேசி: 0431 - 2670460, 2670557
பேக்ஸ்: 0431 - 2670557