திருவிழாக்கள்

தைப்பூசம்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பான வைபவங்களில் தைப்பூசத் திருவிழா முக்கிய இடம் வகிக்கின்றது. தை மாதம் என்றாலே தமிழர்களுக்கு விழா விருந்தாகவே இருக்கும்.

10 - வது நாள் கொண்டாடப்படும் இப்பெருவிழாவில் அம்பாள் காலை சுமார் 7.31 மணிக்குமேல் 8.31 மணிக்குள் கண்ணாடி பல்லக்கில் பவனி வருகிறாள். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ திருக்கோயிலிருந்து புறப்பட்டு டோல்கேட், நொச்சியம் வழியாகச் சென்று, வழி நெடுகிலும் பல உபயங்கள் கண்டருளி மாலை 5.00 மணிக்கு கொள்ளிடம் வடதிருகாவேரியை சென்றடைகிறாள். மாலை 5.30 மணிக்கு அன்னை தீர்த்தவாரி கண்டு, சிறப்பு ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருப்பாள். இத்தருணத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடி அம்பாளின் அருளைப் பெற்றுக் கொண்டிருப்பர். அன்றிரவு சிறப்பான வாணவேடிக்கைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். மேலும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இந்நாள் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. அன்று திருக்கோயில் நடை மாலை 4.00 மணிக்கு சாத்தப்படுகிறது.

சீர்பெறும் நிகழ்ச்சி

இரவு 10.00 மணியளவில் சமயபுரம் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலிருந்து சீர் மரியாதை பெறும் நிகழ்வு அங்குள்ள ஆஸ்தான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. அன்று நள்ளிரவு 1.00 மணி முதல் 3.00 மணி வரை அம்மனுக்கு மஹா அபிஷேகமும் பூஜைகளும் நடைபெறுகிறது. அதிகாலை 5.00 மணிக்கு அம்பாள் அங்கிருந்து கண்ணாடிப் பல்லக்கில் புறப்பட்டு நொச்சியம், மண்ணச்சநல்லூர், வெங்கக்குடி வழியாக வரும் வழியில் பல்வேறு உபயங்கள் கண்டருளி, இரவு 10.00 மணியளவில் திருக்கோயில் வந்தடைகிறாள். இரவு 10.00 மணியளவில் திருக்கோயில் வந்தடைகிறாள். இரவு 11.00 மணிக்கு அம்பாளுக்கு துவாஜரோகணம் நவசந்தி காப்பு அவிழ்த்தல் ஆகியன நடைபெறுகின்றது. தைப்பூச உற்சவம் அன்றிரவுடன் முடிவடைகின்றது.

தேர்த் திருவிழா

பொதுவாக தேர்த்திருவிழா என்பது பிரம்மோத்சவத்தைக் குறிக்கும். இப்பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இதனை இன்பத்திருவிழா என்றே கூறலாம். இவ்விழாவில் கொடியேற்று விழா, வாகனாதி விழா, தேர்விழா மற்றும் தீர்த்தவிழா முதலிய முக்கிய திருவிழாக்கள் இத்தருணத்தில் நடைபெறும். இவ்விழாக்கள் ஒவ்வொன்றும் இறைவன், இறைவியின் ஐந்தொழில்களைக் கொண்ட தத்துவத்தை உணர்த்துவதாகும்.

கொடியேற்று விழா படைத்தலையும், வாகனாதி காத்தலையும், தேர்த்திருவிழா அழித்தலையும், மௌனவிழா மறைத்தலையும், தீர்த்த விழா அருளல் தொழிலையும் குறிக்கும். இவ்வாறு இறைவன் இறைவியின் ஐந்தொழில்களையும் அதன் உண்மைகளையும் உலகிற்கு உணர்த்தவும், உயிர்கள் நலம்பெறவும், இப்பெருவிழா நடைபெற்று வருகிறது. அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலிலும் இத்தகைய வைபவங்கள் மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன.

பிரம்மோத்சவத்தின் பத்தாம் நாள் நடைபெறும் இவ்விழா பிரசித்திப் பெற்றது எனக்கூறப்படுகிறது. அன்று காலை 10.00 மணிக்கு அம்பாள் திருக்கோயிலிருந்து கேடயத்தில் புறப்பட்டு திருத்தேருக்கு வந்து சேர்கிறாள். பூ மற்றும் பல்வேறு அலங்காரங்களுடன் கூடிய திருத்தேரில் அம்பாள் வீற்றிருக்க காலையில் திருத்தேர் வடம் பிடித்தல் இனிதே துவங்குகிறது. பார்வதி மண்டபத்தின் கிழக்கில் இடப்புறம் தெற்கு நோக்கி புறப்படும் திருத்தேர், ஊரின் முக்கிய வீதி வழியாகச் சென்று தம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். இத்தருணத்தில் பல இலட்சகணக்கான மக்கள் அம்பாளின் அருளைப்பெற பல ஊர்களிலிருந்து அன்னையின் திருத்தலத்திற்கு வந்து வழிபட்டுச் செல்வர். மேலும் தெற்கு நோக்கிய திருத்தேர் பவனி, மேற்கு, வடக்கு, கிழக்கு என வீதிகளை கடந்து மீண்டும் திருக்கோயிலின் திருவீதி முன் திருத்தேர் நிலைக்கு வந்து சேர்கின்றது. இரவு 10.00 மணி வரை திருத்தேரிலே பொதுமக்களுக்கு அம்பாள் காட்சிதருகிறாள். இரவு 10.30 மணிக்கு திருத்தேரை விட்டு இறங்கி இரவு 11.00 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைகிறாள்.

அம்பாளை நேரடியாகச் சென்று தரிசிக்க இயலாத பக்தர்கள், திருத்தேர் உலா மூலம் தாங்கள் காணத் துடித்த அம்மனை நேரடியாகக் கண்டு அருள்பெறும் வாய்ப்பினையும் பெறுகின்றனர்.

மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், இயலாதோர் மற்றும் பிறர் அம்பாளின் அருளைப் பெற இத்திருத்தேர்விழா மிகச் சிறப்பானதொரு வாய்ப்பாக அமைகிறது. வலம் வரும் அன்னையின் அருளை மக்களனைவரும் பெற்று புத்துயிருடன் தங்கள் இல்லம் நோக்கிச்செல்கின்றனர். அன்னை நம் துன்பங்களையும், அறியாமையால் நமக்குள் இருக்கும் ஆணவத்தையும் அடியோடு அகற்றுகிறாள். திருத்தேர் பவனிவரும் அம்பாள் தன்னுடைய அருளை ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்களுக்கு எவ்வித பேதமுமின்றி ஏகமனதாய் வழங்குகிறாள். ஆன்மா என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அத்தகைய ஆன்மாக்களாகிய நாம் ஒன்றுக்கூடி ஒருமித்த மனநிலையில் அன்னை மகமாயியை தியானிக்க நமது ஆன்மா முக்திபெறும் என்பது இதன் வழி அறியப்படுகின்றது.

பூச்சொரிதல் திருவிழா

மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் இவ்விழா தமிழகத்தின் வேறு எங்கும் நிகழாத விமரிசையான பெருவிழாவாகும். இந்நாளில் காலை திருக்கோயில் பார்வதி மண்டபத்திலிருந்து திருக்கோயில் இணைஆணையர் / செயல் அலுவலர், அர்ச்சகர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தகோடிகள் அனைவரும் புஷ்ப கூடையுடன் திருவீதி உலா வருகின்றனர். இதனை அடுத்து காலை 8.00 மணிக்கு மேல் அம்மனின் பச்சைப்பட்டினி விரத காப்பு கட்டுதல் இனிதே துவங்குகிறது. ரக்ஷாபந்தனம் என்றழைக்கப்படும் நிகழ்வில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மாலை அணிந்து நோன்பு இருப்பர். இச்சம்பவத்தன்று பிரக்திஷ கணபதி மூலம் எடுத்துவரும் புஷ்பங்களால் அருள்மிகு அம்பாளுக்கு ஆண்டவர் சன்னதியில் புஷ்ப அபிஷேகம் நடைபெறுகிறது. இது சமயம் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் அம்மனுக்கு ஏராளமான வகைகளுடன் கூடிய மலர்களை அபிஷேகம் செய்வர். அம்மனை விதவிதமான மலர்களால் அலங்கரித்து பக்தர்கள் கண்டு இன்புறுவர். தமிழகத்தில் இவ்வாறான பூச்சொரிதல் விழா வேறு எங்கும் நிகழாத, காணக்கிடைக்காத காட்சியாகும். அன்று மாலை 3.00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதனை அடுத்து மகாமண்டபத்தில் சாயரட்சை பூஜை அம்பாளுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதில் பச்சைமாவு, இளநீர், பாவாடை நெய்வேத்தியம் மற்றும் பழவகைகள் ஆகியன இன்றுமுதல் 28 நாட்களுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. மேலும் நீர்மோர், வடை, பருப்பு, பானகம், துள்ளுமாவு ஆகியனவும் மகாமண்டபத்தில் வைத்து அம்மனுக்கு சாயரட்சை பூஜையை நடத்துகின்றனர். பக்தர்களின் நலன் கருதி அன்று இரவு முழுவதும் திருக்கோயில் நடை திறக்கப்படுகிறது. அம்பாளுக்கு பூச்சொரிதல் விழா தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

பூச்சொரிதல் திருவிழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை பல்வேறு பூக்களால் அலங்கரித்து வழிபட்ட வண்ணமாய் இருப்பர். பல்வேறு இனமக்கள் தாங்கள் விரும்பியவாறு ஏராளமான மலர்களை அம்மனுக்கு அணிவித்து மகிழ்வர். இந்நாளில் திருக்கோயில் முழுவதும் மலர்கள் குவிந்து காணப்படும்.

பச்சைப் பட்டினி விரதம்

அன்னை இத்திருத்தலத்தில் பதம்மாறி சிவபதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்புத்திருவுருவமாக சுகாசனத்தில் ஆயிரம்கோடி சூர்யபிரகாசத்துடன் தங்க திருமுடிக்கொண்டு குங்குமநிறமேனியாய், வைர ஆபரணங்களுடன் சூர்ய சந்திரனைப் போல ஜொலித்து கண்களில் அருள் ஒளி பாவித்து கருணை முகமாய், அன்னைக்கு அன்னையாய், ஆதிமுதல் ஆதார சக்தியாய் நாடிவருவோர்க்கு மட்டுமின்றி, நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களைக் காக்கவும், மாதுளம் மேனியாள் மஞ்சள் ஆடை உடுத்தி, திருமேனியில் வாசனை மலர்களைத் தரித்து மும்மூர்த்திகளை நோக்கியும், மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், அன்னை தவம் மேற்கொள்கிறாள். பக்தர்களுக்கு எவ்வித நோய்களும் தீவினைகளும் அணுகாது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க அம்மன், பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள்.

வருடந்தோறும் மாசி கடை ஞாயிறு முதல் பங்குனி கடை ஞாயிறு வரை இவ்விரதத்தில் அன்னை கடும் தவம் இருக்கிறாள். 28 நாட்களும் அன்னைக்கு அனைத்துவிதமான நைவேத்தியங்களும் படைக்கப்படுவதில்லை. உண்ணாநோன்பு கொள்ளும் அன்னைக்கு உப்பில்லா நீர்மோரும், கரும்பு பானகமும், இளநீர் மற்றும் குளீருட்டும் கனிவகைகள் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. 28- வது நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி, அதிலிருந்து 10- வது நாள் திருத்தேர் விழா நடைபெறுகிறது. இத்தருணத்தில் அன்னையை வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும். 12 ராசிகளின் அதிபதியாக அன்னையே விளங்குவதால் அது தொடர்பான அனைத்து தோஷங்களையும் துடைத்து அகற்றுகிறாள்.

நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி, நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாகக் கொண்டு அருள்பாலிப்பதால் அம்பாளை இந்த காலக்கட்டத்தில் வணங்குவதன் மூலம் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் பரிபூரண நம்பிக்கையாயுள்ளது. பொதுவாக பக்தர்கள் திருக்கோயில்களில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அந்தந்த மூர்த்திகளை ஆராதனை செய்து உண்ணாநோன்பு கடைபிடிப்பது வழக்கம். ஆனால், இத்திருத்தலத்தில் மட்டும்தான் மரபு மாறி மகாமாரியம்மன் சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய மூர்த்திகளை நோக்கி தன்னை நாடி வரும் பக்தர்களின் நலனுக்காக அவர்களுக்கு எவ்வித தீங்கும் நேரா வண்ணம் காத்திட பச்சைப்பட்டினி விரதம் இருந்து கடுமையான தவம் செய்து இச்சா, கிரியா, ஞான சக்திகளை பெற்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். அம்பாள் மஞ்சள் ஆடை அணிந்து இத்தகைய பச்சைப்பட்டினி விரதம் இருப்பதை தரிசனம் செய்ய இலட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகைதந்த வண்ணம் இருப்பார்கள். தன்னை நாடி வரும் பக்தர்களின் நலனுக்காக தெய்வமே பச்சைப்பட்டினி விரதமிருந்து காப்பது உலகில் வேறு எந்த திருக்கோயிலிலும் காண இயலாத அருள்செறிவான திருநிகழ்வாகும்.

அன்னை இத்திருத்தலத்தில் பதம்மாறி சிவபதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்புத்திருவுருவமாக சுகாசனத்தில் ஆயிரம்கோடி சூர்யபிரகாசத்துடன் தங்க திருமுடிக்கொண்டு குங்குமநிறமேனியாய், வைர ஆபரணங்களுடன் சூர்ய சந்திரனைப் போல ஜொலித்து கண்களில் அருள் ஒளி பாவித்து கருணை முகமாய், அன்னைக்கு அன்னையாய், ஆதிமுதல் ஆதார சக்தியாய் நாடிவருவோர்க்கு மட்டுமின்றி, நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களைக் காக்கவும், மாதுளம் மேனியாள் மஞ்சள் ஆடை உடுத்தி, திருமேனியில் வாசனை மலர்களைத் தரித்து மும்மூர்த்திகளை நோக்கியும், மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், அன்னை தவம் மேற்கொள்கிறாள். பக்தர்களுக்கு எவ்வித நோய்களும் தீவினைகளும் அணுகாது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க அம்மன், பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள்.

அன்னை இத்திருத்தலத்தில் பதம்மாறி சிவபதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்புத்திருவுருவமாக சுகாசனத்தில் ஆயிரம்கோடி சூர்யபிரகாசத்துடன் தங்க திருமுடிக்கொண்டு குங்குமநிறமேனியாய், வைர ஆபரணங்களுடன் சூர்ய சந்திரனைப் போல ஜொலித்து கண்களில் அருள் ஒளி பாவித்து கருணை முகமாய், அன்னைக்கு அன்னையாய், ஆதிமுதல் ஆதார சக்தியாய் நாடிவருவோர்க்கு மட்டுமின்றி, நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களைக் காக்கவும், மாதுளம் மேனியாள் மஞ்சள் ஆடை உடுத்தி, திருமேனியில் வாசனை மலர்களைத் தரித்து மும்மூர்த்திகளை நோக்கியும், மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், அன்னை தவம் மேற்கொள்கிறாள். பக்தர்களுக்கு எவ்வித நோய்களும் தீவினைகளும் அணுகாது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க அம்மன், பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள்.